உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கொடைக்கானலில் விதிகளை மீறி படப்பிடிப்பு நடத்திய குழுவினருக்கு அபராதம்

Published On 2022-06-04 06:01 GMT   |   Update On 2022-06-04 06:01 GMT
அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்திய குழுவினருக்கு அதிகாரிகள் ரூ.40ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இயற்கை எழில்கொஞ்சும் மலைப்பகுதிகள் உள்ளன. இதனால் அதிகளவில் சினிமா படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக அரசுத்துறைகளில் அனுமதிெபற்று அதன்பின்னர் படப்பிடிப்பு நடத்தவேண்டும். இந்த நிலையில் கொடைக்கானல் நகராட்சி சுகாதார பிரிவு உள்ளிட்ட அரசுத்துறைகளில் எந்தவித அனுமதியும் பெறாமல் நகராட்சி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்களால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்திய குழுவினருக்கு அதிகாரிகள் ரூ.40ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் முறையான அனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தினர். சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் வாகனங்களை நிறுத்துவதும், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. எனவே அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News