உள்ளூர் செய்திகள்
மணல் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்
டிரைவர் தப்பி ஓட்டம்
கோவை:
கோவை மதுக்கரையை அடுத்த வழுக்குப்பாறை தாசில்தாரராக வேலை செய்து வருபவர் விஜயகுமார்.
சம்பவத்தன்று இவர் அதிகாரிகளுடன் சட்டகல்புதூர்-கன்னமநாயக்கனூர் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் அங்கு தாசில்தார் வாகன சோதனையில் ஈடுபடுவதை கண்டார்.
பின்னர் லாரியை ரோட்டோரம் நிறுத்தி லாரியில் இருந்து குதித்து டிரைவர் தப்பி ஓடினார்.இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த லாரி அருகே சென்று சோதனை செய்தனர். அதில் அனுமதி இல்லாமல் 3 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து தாசில்தார் லாரியை பறிமுதல் செய்து மதுக்கரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த லாரியை ஓட்டி வந்ததது யார்? எங்கு இருந்து மணல் கடத்தி வரப்பட்டது? லாரியின் உரிமையாளர் யார்? விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.