உள்ளூர் செய்திகள்
தாமரை மொட்டு

மாடித்தோட்டத்தில் மலரும் தாமரை

Published On 2022-06-03 09:33 GMT   |   Update On 2022-06-03 09:33 GMT
குளம், குட்டைகளில் சேற்றில் வேரூன்றி நீரின் மேற்பரப்பில் மட்டுமே தாமரை வளரும் நிலையில் முருகேசன் அவரது மாடி தோட்டத்தில் வளர்த்து வரும் தாமரையானது தற்போது மொட்டு வைத்துள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் சிவன் தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன், தையல் நிலைய உரிமையாளர் சங்க (பவர்டேபிள்) துணை செயலாளர். இவர் தனது வீட்டு மாடியில் 1500 சதுர அடி பரப்பில் மாடி தோட்டம் பராமரித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் கோவையில் இருந்து தாமரை விதை வாங்கிவந்து மாடித்தோட்டத்தில் வைத்து வளர்த்து வருகிறார்.

குளம், குட்டைகளில் சேற்றில் வேரூன்றி நீரின் மேற்பரப்பில் மட்டுமே தாமரை வளரும் நிலையில் முருகேசன் அவரது மாடி தோட்டத்தில் வளர்த்து வரும் தாமரையானது தற்போது மொட்டு வைத்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் முருகேசன் வீட்டில் வளர்த்து வரும் தாமரையை அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.

இதுகுறித்து முருகேசன் கூறுகையில், பரிச்சார்த்த முறையில் விதை வாங்கி வந்து பூந்தொட்டியில் வளர்க்க தொடங்கினேன். பொதுவாக தண்ணீரில் மிதக்கும் தாமரை எங்கள் மாடி தோட்டத்தில் இரண்டரை அடி வரை வளர்ந்து மொட்டு மலர்ந்துள்ளது என்றார்.
Tags:    

Similar News