உள்ளூர் செய்திகள்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை கலெக்டர் ஸ்ரேயா பி சிங் நட்டுவைத்த காட்சி.

கருணாநிதி பிறந்தநாள்

Published On 2022-06-03 14:17 IST   |   Update On 2022-06-03 14:17:00 IST
நாமக்கல்லில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி கலெக்டர் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
நாமக்கல்:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளையொட்டி நாமக்கல் மாவட்ட கலெக்டர்  அலுவலக வளாகத்தில் வனத்துறை அலுவலகம் எதிரே கலெக்டர் ஸ்ரேயா பி சிங் மரக்கன்றை நட்டார். 

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல், மாவட்ட வன அலுவலர் ராஜா, உதவி வனப்பாதுகாவலர் அல்லிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனையடுத்து ராசிபுரம், கொல்லிமலை, முள்ளுக்குறிச்சி, நாமக்கல் ஆகிய இடங்களில் புங்கன், வேம்பு ஆகிய  மரக்கன்றுகள் தலா 250 மூலம் 1000 மரக்கன்றுகள் வனத்துறை சார்பில் நடப்பட உள்ளன.
Tags:    

Similar News