உள்ளூர் செய்திகள்
வணிக நிறுவனங்களுக்கு கானாடுகாத்தான் பேரூராட்சி தலைவர் ராதிகா ராமச்சந்திரன் குப்பை தொட்டிகளை வழங்கினார்.அருகில்

குப்பை இல்லாத பேரூராட்சியாக மாற்றுவோம்

Published On 2022-06-03 06:15 GMT   |   Update On 2022-06-03 06:15 GMT
கானாடுகாத்தானை குப்பை இல்லாத பேரூராட்சியாக மாற்றுவோம் என தலைவர் ராதிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் பேரூராட்சி தமிழ்நாட்டின் முன்மாதிரி பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி கானாடுகாத்தான் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் குப்பைத் தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் ராதிகா ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.

செயல் அலுவலர் ரமேஷ் பாபு முன்னிலை வகித்தார். இதில் வணிக நிறுவனங்களுக்கு குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டு  மட்கும் குப்பை, மட்கா குப்பை என பிரித்து வழங்கும்படி கேட்டுக்கொண்டனர்.பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் குப்பைகளை பிரித்து வழங்கவும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தினர்.

கானாடுகாத்தான் பேரூராட்சியை குப்பைகள் இல்லாத பேரூராட்சியாக மாற்றுவோம் என தலைவர் ராதிகா ராமச்சந்திரன் கூறினார்.

இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் அன்புக்கரசி, வசந்தி, சுரேகா, பாண்டிச்செல்வம், கருப்பையா உள்பட பேருராட்சி அலுவலர்கள், துப்புறவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News