உள்ளூர் செய்திகள்
வாலிபர் ரத்தகாயத்துடன் மர்மச்சாவு

திருவள்ளூர் அருகே வாலிபர் ரத்தகாயத்துடன் மர்மச்சாவு- போலீஸ் விசாரணை

Published On 2022-06-02 17:25 IST   |   Update On 2022-06-02 17:25:00 IST
திருவள்ளூர் அருகே வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் அருகே உள்ள புங்கத்தூர் பகுதியை சேர்ந்த பூவரசன் (வயது24). தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் பூவரசன் ராமதண்டலம் கிராமத்தில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்தார். நேற்று இரவு திருவள்ளூர் - செங்குன்றம் சாலை மூலக்கரை பகுதியில் ரத்த வெள்ளத்தில் பூவரசன் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்ததும் வெங்கல் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பூவரசன் விபத்தில் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

ஆனால் பூவரசன் உடல் கிடந்த இடம் அருகே அவரது மோட்டார் சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. எனவே மர்ம நபர்கள் பூவரசனை அடித்து கொலை செய்து இருக்கலாம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Tags:    

Similar News