உள்ளூர் செய்திகள்
கந்தர்வகோட்டையில் மன நல விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்

கந்தர்வகோட்டையில் மனநல விழிப்புணர்வு முகாம்

Published On 2022-06-02 15:52 IST   |   Update On 2022-06-02 15:52:00 IST
கந்தர்வகோட்டையில் மனநல விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:

மனச்சிதைவு தினத்தை முன்னிட்டு ஸ்கார்ப்இந்தியா சார்பில் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மஞ்சபேட்டை கிராமத்தில் 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு மன நல விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வுமுகாமில் மனச்சிதைவு எதனால் ஏற்படுகின்றது. மனநலம் பாதிக்கப்படுவதை பற்றியும், தற்கொலை தடுப்பு பற்றிய நூறு நாள் வேலை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,  

மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு செய்யப்படும் சேவைகள் பற்றியும் ஸ்கார்ப் இந்தியா பணியாளர்கள் அளிக்கப்படும் சேவைகள் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.

முகாமில் ஸ்கார்ப் இந்தியா பணியாளர்கள் கவிதா வாழ்வாதார ஒருங்கிணைப்பாளர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News