உள்ளூர் செய்திகள்
பொதுமக்கள் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட காட்சி.

நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Published On 2022-06-02 15:27 IST   |   Update On 2022-06-02 15:27:00 IST
நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நல்லூர் வழைக்குறிச்சி நெறிஞ்சிக்குடி கூடலூர் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் சுமார் 800க்கும் மேற்பட்டோர் தங்கள் நகைகளை கூட்டுறவு வங்யில் வைத்து விவசாய நகைக்கடன்கள் மற்றும் நகைக்கடன்களை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கிருஷ்ணன் என்பவர் அவரது மகளின் நகைகளை வைத்து நகைக்கடன் பெற்றுள்ளார்.இந்நிலையில் தனது மகளின் திருமணத்திற்காக அடகு வைத்த நகைகளை திருப்ப வந்துள்ளார். அவரது நகையை வங்கி ஊழியர்கள் சோதிக்கும்போது அங்கு அவரது நகை இல்லை என கூறப்படுகிறது.

இதனால் அவரது மகளின் திருமணம் தடைபடும் சூழ்நிலையில் வங்கி ஊழியர்கள் அவரை புதுக்கோட்டைக்கு அழைத்துச் சென்று அவர் அடகு வைத்தது போன்ற நகையை மாற்றாக வாங்கி கொடுத்துள்ளனர்.

இதுபோன்று ஊர் பொதுமக்களின் நகையும் தொலைந்து போயிருக்கலாம் என்று கருதியவர் சமூக வலைதளங்களில் இக்கருத்தை பதிவிட்டு தங்களது நகை உள்ளதா என்று பரிசோதித்து கொள்ளுங்கள் என்று சமூக வலைத்தளத்தில் சொல்லியுள்ளார்.

இதனால் பதட்டம் அடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முற்றுகையிட்டு அங்கிருந்த வங்கி ஊழியர்களிடம் தங்கள் நகைகளை காட்டுமாறு கூறியுள்ளனர். நகைகளை காட்ட வங்கி ஊழியர்களும் சிறிது அவகாசம் வேண்டும் என்றும்கூறியதையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர். இச்சம்பவத்தால் நல்லூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News