உள்ளூர் செய்திகள்
காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர் ஜெயந்திர பானுரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2022-06-02 15:14 IST   |   Update On 2022-06-02 15:14:00 IST
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருஷ்ணகிரி கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் நெடுங்கல் மற்றும் பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது சுகாதார நிலையத்தில், நோயாளி களின் வருகை பதிவேடு, கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சேவை பதிவேடு, குழந்தை களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் வாரந்தோறும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் குறித்த பதிவேடு களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கிராம சுகாதார செவிலியர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு மாதந்தோ றும் வழங்கப்படும் மருந்துகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசிகள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்வ தன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்க வேண்டும். மேலும், மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார். 

பின்னர் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, மருந்து பொருட்கள் இருப்பு, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News