உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

மாவட்டம்- கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு கூட்டம் நடத்த உத்தரவு

Published On 2022-06-01 07:39 GMT   |   Update On 2022-06-01 07:39 GMT
ஆர்.டி.ஓ., தலைமையிலும் முகாம்கள் நடத்த வருவாய்த்துறை முதன்மை செயலர் சித்திக் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர்:

கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து வகை குறைகேட்பு கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. இயல்புநிலை திரும்பிய பின் குறைகேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதேபோல் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு கூட்டத்தையும் நடத்த வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வருவாய் நிர்வாக கமிஷனர் தலைமையில், மாநில அளவிலான குறைகேட்பு முகாம் தவிர, இரு மாதங்களுக்கு ஒருமுறை கலெக்டர் தலைமையிலும், மாதம் ஒருமுறை ஆர்.டி.ஓ., தலைமையிலும் முகாம்கள் நடத்த வருவாய்த்துறை முதன்மை செயலர் சித்திக் உத்தரவிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் நல சங்க பிரதிநிதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அழைத்து குறைகேட்பு நடத்தப்படும்என்றனர்.

Tags:    

Similar News