உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தாராபுரம்-பொள்ளாச்சிக்கு இரவு நேர பஸ் சேவை - விவசாயிகள் கோரிக்கை

Published On 2022-06-01 12:40 IST   |   Update On 2022-06-01 12:40:00 IST
இரவு நேரம் பொள்ளாச்சி, உடுமலைக்கு பஸ் இயக்கினால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும்.

தாராபுரம்:

தாராபுரம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளருக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு பஸ் மூலம் தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மாசாணி அம்மன் கோவில், பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், பத்திரகாளியம்மன் கோவில், புதுப்பாளையம் கருப்பராயன் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று வருகின்றனர்.

ஆனால் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு இரவு நேரம் பஸ் இயக்கப்படுவதில்லை. எனவே இரவு நேரம் பொள்ளாச்சி, உடுமலைக்கு பஸ் இயக்கினால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும். எனவே தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் உடுமலைக்கு இரவு நேரம் பஸ் இயக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News