உள்ளூர் செய்திகள்
வெற்றி பெற்ற மாணவி ஏஞ்சலின்ரெனிட்டா.

இந்திய அளவில் இடம் பிடித்த மைக்கேல்பட்டி மாணவி

Published On 2022-05-31 15:13 IST   |   Update On 2022-05-31 15:13:00 IST
மத்திய அரசு பணியாளர் தேர்வில் மைக்கேல்பட்டி மாணவி இந்திய அளவில் 338-வது இடத்தை பிடித்துள்ளார்.
பூதலூர்:

மத்திய அரசு நடத்திய மத்திய தேர்வாணைய தேர்வு முடிவுகள் வெளி வந்துள்ளன. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்–பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ரவி என்பவரின் மகள் ஏஞ்சலின் ரெனிட்டா (23) அகில இந்திய அளவில் 338-வது இடத்தை பிடித்தார்.

ஆரம்பம் முதல் மேல்நிலை படிப்பு வரை தமிழ் வழி கல்வியில் பயின்று, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி. இ. வேளாண்மை முடித்தவர் ஏஞ்சலின்ரெனிட்டா. தொடக்க கல்வியை மைக்கேல்பட்டி உதவி–பெறும் தொடக்கப்–பள்ளியில் படித்தார். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடியமைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்–பள்ளியில் படித்தவர்.

10-ம் வகுப்பில் 490 மதிப்பெண்ணும் 12-ம் வகுப்பில் 1158 மதிப்பெண் பெற்றார். சென்னையில் பி.இ. வேளாண்மை முடித்த பின்னர் முழு வீச்சில் யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயார் படுத்திக்கொண்டார். தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றார். 

இவரது அண்ணன் எம். டெக் படித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அண்ணன்-தங்கை இருவரும் பொறி–யியல் படித்திருந்த போதிலும் முயற்சியுடன் முனைந்து படித்து முதல் தடவையில் மத்திய அரசு தேர்வாணைய தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்த ஏஞ்சலின் ரெனிட்டாவை பெற்றோர்கள், உறவினர்கள் நண்பர்கள் பாராட்டினார்கள்.

Tags:    

Similar News