உள்ளூர் செய்திகள்
குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை:
தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் குறளோவியப் போட்டியில் வெற்றிபெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவிகளுக்கு, காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:
மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென ‘குறளோவியம்” என்ற பெயரில் ஓவியப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சிறந்த 365 ஓவியங்கள் தெரிவு செய்து, போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களைப் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது.
குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்று சிறப்புப் பரிசாக ரூ.5,000 மும், ஊக்கப் பரிசாக ரூ.1,000 மும் மற்றும் அனைத்து மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது என்றார்.