உள்ளூர் செய்திகள்
ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

திருவரங்குளம் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

Published On 2022-05-31 14:10 IST   |   Update On 2022-05-31 14:10:00 IST
ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலங்குடி அருகேயுள்ள வெண்ணாவல்குடி ஊராட்சியில் அரசு திட்டத்தில் வீடு கட்டப்படாமலே சிலருக்கு  நிதி விடுவிப்பு செய்துள்ளனராம். 

மேலும் தேசிய ஊரக வேலை  உறுதித்திட்டத்தின் மூலம் முறைகேடு நடைபெற்றுள்ளதாம். இதை கண்டித்து திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் குமாரவேல் தலைமையில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, 

அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கருணா, ஒன்றிய தலைவர் விமல்துரை, கீரமங்கலம் பேரூராட்சி உறுப்பினர் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News