உள்ளூர் செய்திகள்
வெள்ளமலையில் சமத்துவபுரம் அமைக்க அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்.

சமத்துவபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

Published On 2022-05-31 08:40 GMT   |   Update On 2022-05-31 08:40 GMT
வெள்ளமலையில் சமத்துவபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியம் அம்பலக்காரன்பட்டி அருகே உள்ளது வெள்ள மலை. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிட்கோஅமைப்பதற்காக அரசு அதிகாரிகள் இடத்தை பார்வையிட வந்த போது அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்புதெரிவித்தனர்.

இதுகுறித்து மேலூர் தாலுகா அலுவலகத்தில் வெள்ளலூர் பகுதியை சேர்ந்த 66 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்திருந்தனர். இந்த சூழ்நிலையில் அப்பகுதியில் இன்று காலை சென்னையிலிருந்து ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், செயற்பொறியாளர் இணை இயக்குனர் மற்றும் உயரதிகாரிகள் அவ்விடத்தில் சமத்துவபுரம் அமைப்பதற்காக இடத்தை பார்வையிட வந்தனர்.
 
அப்போது அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இப்பகுதியில் அதிகளவு மான்கள் வாழ்கின்றது. மற்றும் ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. எனவே இங்கு சமத்துவ புரம் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையடுத்து அதிகாரிகள் உங்கள் கருத்தை அரசுக்கு தெரிவிப்பதாக கூறி அங்கி ருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது அவருடன் மேலூர் வட்டார வளர்ச்சி அலு வலர் பாலச்சந்தர், அம்பலக்காரன் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி ராமையா மற்றும் யூனியன் அலுவலர்கள் உடன் வந்திருந்தனர்.
Tags:    

Similar News