உள்ளூர் செய்திகள்
கைது

பட்டறை தொழிலாளி கொலை: கைதான அரசு ஆஸ்பத்திரி ஊழியர் வாக்குமூலம்

Published On 2022-05-31 14:01 IST   |   Update On 2022-05-31 14:01:00 IST
பட்டறை தொழிலாளி கொலையில் போலீசில் புகார் கொடுப்பதாக மிரட்டியதால் கொன்றோம் என கைதான அரசு ஆஸ்பத்திரி ஊழியர் வாக்குமூலம் அளித்தனர்.
மதுரை

மதுரை காமராஜபுரம், திரு.வி.க. நகரை சேர்ந்த அலுமினிய பட்டறை தொழிலாளி ராஜேஷ்குமார் (வயது40)  மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அப்போது சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து, காவல் நிலையத்தில் விசாரித்தனர்.  அவர்கள் மருதுசூர்யா (30), தெப்பக்குளம் சி.எம்.ஆர் ரோடு சந்தோஷ் (24), வண்டியூர் தக்காளி சதீஷ் (28) என்பது தெரியவந்தது. அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தியதில் ராஜேஷ்குமாரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து மருதுசூர்யா, தக்காளிசதீஷ், சந்தோஷ் ஆகிய 3 பேரையும் கீரைத்துறை போலீசார் கைது செய்தனர். போலீசில் மருதுசூர்யா கொடு த்துள்ள வாக்குமூலத்தில்  கூறியிருப்பதாவது:-
நான் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தினக்கூலி பணியாளராக வேலை பார்த்து வருகிறேன்.  கொரோனா காலகட்டத்தில் கிருமி நாசினி  தெளிப்பதற்காக திரு.வி.க நகருக்குச் சென்றேன். அப்போது எனக்கு ராஜேஷ்குமாரின் மனைவி சத்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. 

அலுமினிய பட்டறையில் ராஜேஷ்குமார் வேலை பார்ப்பதால் சத்யா குடித்தனம் நடத்த போதிய பணமின்றி அவதிப்பட்டு வந்தார். நான் அவரிடம்  உங்களையும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வேலைக்கு சேர்த்து விடுகிறேன். தினந்தோறும் 500 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை  கூறினேன். அவரும் ஒப்புக் கொண்டார். 

இதனைத்தொடர்ந்து   2 பேரும் நெருங்கி பழகினோம்.  நானும் சத்யாவும் நெருங்கி பழகுவது, ராஜேஷ் குமாருக்கு தெரியவந்தது.  அவர் சத்யாவை வேலைக்கு அனுப்பவில்லை. இதனால் நான் அவளுடன் பழக முடியாமல் தவித்து வந்தேன். இருந்தபோதிலும் நாங்கள் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தோம்.
 
இது எப்படியோ ராஜேஷ் குமாருக்கு தெரிந்துவிட்டது. அவர் என்னுடன் பேச கூடாது என்று சத்யாவிடம் சண்டை போட்டார்.   ராஜேஷ்குமார் நேற்று முன்தினம் என்னை தேடி வந்தார். அப்போது அவர்  நீ என் மனைவியுடன் இனிமேல் செல்போனில் பேசக்கூடாது. மீறி பேசினால் போலீசில் புகார் கொடுப்பேன் என்று மிரட்டினார். எனவே அவரை கொல்ல வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. 

இது குறித்து நான் எனது நண்பர்களான  ஆட்டோ டிரைவர் தக்காளி சதீஷ், பழ வியாபாரி சந்தோஷ் ஆகியோரிடம்  பேசினேன். அப்போது ராஜேஷ்குமாரை நள்ளிரவில் கொல்ல முடிவு செய்தோம். அதன்படி நாங்கள் 3 பேரும் திரு.வி.க நகருக்கு சென்றோம். அங்கு சத்யா வீட்டின் கதவைத் தட்டினோம். 
அப்போது ராஜேஷ்கு மார் வெளியே வந்தார். அவரை நாங்கள் கத்தியால் சரமாரியாக குத்தினோம்.  அவர்    அலறியபடி மயங்கி கீழே விழுந்தார். அதன்பிறகு   சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்று விட்டோம். 

இவ்வாறு  அவர் வாக்கு மூலம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.      
Tags:    

Similar News