உள்ளூர் செய்திகள்
சோழவந்தான்

ஜெனகை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

Published On 2022-05-31 12:46 IST   |   Update On 2022-05-31 12:46:00 IST
ஜெனகை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
சோழவந்தான்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசிமாதம் அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை அன்று திருவிழா கொடியேற்றம் நடந்து17 நாட்கள் திருவிழா   நடைபெறும்.  

இந்த ஆண்டு வருகிற ஜூன் 6-ந் தேதி ஜெனகைமாரியம்மன் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நகரத்தார் சார்பில் 51-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று இரவு நடந்தது. மேளதாளத்துடன், வாணவேடிக்கையுடன் 4 ரத வீதிகளில் பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து கோவிலை வந்தடைந்தனர். 

இதைத்தொடர்ந்து நகரத்தார் பால்குடம் எடுத்து வந்தனர். அர்ச்சகர் சண்முகவேல், அம்மனுக்கு பால் உட்பட 12 அபிஷேகங்கள் செய்து பூச்சொரிதல்விழா சிறப்பு பூஜை நடத்தினார்.இதில் கோவில் செயல்அலுவலர் இளமதி, நகரத்தார் நிர்வாகிகள் படக்கடைமுருகேசன்,ராஜேந்திரன், நாச்சியப்பன்,சேதுசம்பத்,முத்து உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
Tags:    

Similar News