உள்ளூர் செய்திகள்
திருமாவளவன்

நளினி உள்பட 6 பேரும் நிச்சயம் விடுதலை ஆவார்கள்- திருமாவளவன் பேட்டி

Published On 2022-05-31 05:54 GMT   |   Update On 2022-05-31 05:54 GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சியால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள மாலைய கவுண்டன்பட்டியில் நடந்த கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார். அதன்பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

தமிழக மக்களை ஜாதி, மத ரீதியாக துண்டாட நினைக்கும் சில சக்திகளின் கனவு நிறைவேறாது. பெரியார், அம்பேத்கார் போன்றவர்களால் ஈர்க்கப்பட்ட தமிழக மண்ணில் அந்த ஆசை ஒருபோதும் நிறைேவறாது. தமிழகத்தில் நூல் விலை ஏற்றத்தால் போராட்டம் நடத்திவரும் தொழிலாளர்களின் நலன் கருதி மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சியால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.

அதேபோல் இவ்வழக்கில் தொடர்புடைய நளினி உள்பட 6 பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகளவு சுங்கச்சாவடிகள் உள்ளன. எனவே இதனை குறைக்க வேண்டும் என மத்திய அமைச்சரை சந்தித்து நான் கோரிக்கை வைத்தேன். அப்போது உடனடியாக சுங்கச்சாவடிகளை குறைப்போம் என கூறியிருந்தார்.

ஆனால் அவர் சொன்னது போல் சுங்கச்சாவடிகள் குறைக்கப்படவில்லை. எனவே வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதுகுறித்து கோரிக்கை வைத்து பேசுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News