உள்ளூர் செய்திகள்
கட்டாய கல்வி திட்டத்தில் குழந்தைகள் விண்ணப்பம்
இலவச மற்றும் கட்டாய கல்வி திட்டத்தில் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
கீழக்கரை
தமிழகம் முழுவதும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் படி ஏழை, எளிய குழந்தைகள் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளியில் படிப்பதற்காக இலவச மற்றும் கட்டாய கல்வியை மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி எல்.கே.ஜி.வகுப்பில் சேர்க்க கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளிக்கு 38 இடங்கள் ஒதுக்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை அறிவிக்கப்பட்ட ஆவணங்களுடன் பெற்றோர்கள் இணைய தளத்தில் பதிவு செய்தனர்.
இஸ்லாமியா பள்ளியில் சேருவதற்காக மொத்தம் 211 மனுக்கள் கல்வித்துறையால் பெறப்பட்டது. இதில் மாவட்ட கல்வித்துறை அதிகாரி அலுவலகத்தில் 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது, மீதமுள்ள 28 இடங்களுக்கு மாவட்ட கல்வி துறையால் பரிந்துரை செய்யப்பட்ட 163 பெயர்கள் எழுதப்பட்டு குலுக்கல் நடந்தது.
ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பெயர் தேர்வு செய்யப்படுமா? என்ற ஆவலில் பள்ளி வளாகத்தில் காத்திருந்தனர். பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் ஆலோசனையின் படி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், மாவட்ட கல்வித்துறை அலு வலக பார்வையாளர் மாயா முன்னிலையில் குலுக்கல் நடந்தது. இதில் 28 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
பள்ளி நிர்வாக அலுவலர் மலைச்சாமி தேர்வு செய்யப்பட்ட குழந்தை களின் பெயரை அறிவிப்பு செய்தார். பின்னர் பள்ளி யில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.