உள்ளூர் செய்திகள்
தொண்டி மீன் மார்க்கெட்டில் மீன் வரத்து குறைவால் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

தொண்டி மார்க்கெட்டுக்கு மீன் வரத்து குறைந்தது

Published On 2022-05-30 12:28 IST   |   Update On 2022-05-30 12:28:00 IST
நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் தொண்டி மார்க்கெட்டுக்கு மீன் வரத்து குறைந்தது
தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு நம்புதாளை, சோழியக்குடி ஆகிய கடல் பகுதிகளில் இருந்து நாட்டுப்படகு, விசைப்படகுகளில் பிடித்து வரும் மீன்களை ஏலம் விட்டு வெளியூர்களுக்கு வியாபாரிகள் விற்க-வாங்கிச் செல்வது வழக்கம். 

இந்த நிலையில் விசைப்படகுகள் மீன்பிடி  தடைக்காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் ஆழ்கடலில் பிடிக்கப்படும் இறால், நண்டு போன்ற கடல் உணவுப்பொருட்கள் கிடைப்பதில்லை. 

சில நாட்களாக சோழா எனப்படும் காற்று வீசுவதால் இயற்கையாக கடலில் மாற்றம் ஏற்படுவது வழக்கம். மேலும் அமாவாசை நாட்களில் கடல் உள் வாங்குதும் உண்டு. 

அதன்படி தொண்டி கடல் பகுதியில் சுமார் 15 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதனால் படகுகள் தரை தட்டி நின்றன. கரைப்பகுதி சேறும், சகதியுமாக காட்சியளித்தது. 

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

இதன் காரணமாக தொண்டி மார்க்கெட்டுக்கு வழக்கம்போல் வரும் மீன்கள் விற்பனைக்கு வராமல் மீன் வரத்து மிக குறைவாகவே காணப்பட்டது. கோடை விடுமுறையில் அசைவப்பிரியர்கள்   விரும்பிய கடல் உணவுப்பொ ருட்களை வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் வியாபாரிகள் சொல்லும் விலைக்கே வாங்கிச்செல்லும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.
Tags:    

Similar News