உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தூத்துக்குடியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு

Published On 2022-05-29 14:47 IST   |   Update On 2022-05-29 14:47:00 IST
தூத்துக்குடியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்ததால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சியில 4 மண்டலம் 60 வார்டுகள் உள்ளது.மாநகர தெருக்களில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

நேற்று நள்ளிரவில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதியில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண்களை நாய்கள் விரட்டி சென்றது. இதனை  கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் போடவே விரட்டி சென்ற நாய்கள் திரும்பிச் சென்றது.

இதுபோல் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலையில் செல்லும் பொதுமக்கள் குழந்தைகளை விரட்டி விரட்டி சென்று தெரு நாய்கள் கடித்து  வருகிறது என்று  பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

இந்நிலையில் தெரு விளக்குகள் எரியவில்லை என்று பொதுமக்கள் கூறிய புகாரை சரி செய்வதற்காக தெருக்களில் நடந்து சென்று எரியாத தெருவிளக்குகளை பார்வையிடச் சென்ற தி.மு.க. கவுன்சிலர் ஒருவரையும் தெருநாய்கள் விரட்டி கடித்து குதறியது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

 இது குறித்து மாநகர சுகாதாரத் துறையினர் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி தெரு நாய் தொல்லைகளில் இருந்து பொது மக்களை காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News