உள்ளூர் செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், எடப்பாடி பழனிசாமியையும் அன்புமணி சந்தித்தார்

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

Published On 2022-05-29 14:26 IST   |   Update On 2022-05-29 14:26:00 IST
அன்புமணி ராமதாஸ் இன்று காலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரை சந்தித்தார்.

சென்னை:

பா.ம.க. புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் இன்று காலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரை சந்தித்தார்.

அப்போது தனக்கு வாழ்த்து தெரிவித்தமைக்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்றார். அங்கு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி கூறினார்.

பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தி.நகர் அக்கார்டு ஓட்டலில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

Tags:    

Similar News