உள்ளூர் செய்திகள்
அபராதம்

சொத்துவரியை செலுத்தாவிட்டால் இரு மடங்கு அபராதம்

Published On 2022-05-29 07:15 GMT   |   Update On 2022-05-29 07:15 GMT
சொத்துவரியை செலுத்தாவிட்டால் ஜூன் முதல் இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என ஆணையாளர் தகவல் தெரிவித்தார்.
ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சியில் சொத்துவரியை உயா்த்தி சமீபத்தில் நகரசபை கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில், நிலுவையில் உள்ள சொத்து வரிகளை மே மாதம் இறுதிக்குள் பொதுமக்கள் செலுத்த வேண்டும் என நகராட்சி தரப்பில் அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் சந்திரா கூறியதாவது:-

ராமநாதபுரம் நகராட்சியில் பழைய வரிபாக்கியை குறைந்த அபராதத்துடன் நடப்பு மாதமான மே முடிவதற்குள் செலுத்தலாம். 

ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து புதிய முறையில் வரி விதிக்கப்பட்டு கணினியில் ஏற்றப்பட்டுவிடும். ஆகவே புதிய முறையில் வரி செலுத்துவோருக்கு ஏற்கெனவே உள்ள பழைய சொத்து வரிகளுக்குரிய அபராதம் இரு மடங்காக விதிக்கப்பட உள்ளது. அபராதத் தொகையை கூடுதலாக செலுத்துவதைத் தவிா்க்க மக்கள் விரைந்து வரிகளை செலுத்துவது அவசியம் ஆகும். 

ஜூன் மாதத்துக்குள் வரிகளைச் செலுத்தாதவா்கள் மீது நகராட்சி சட்டப்படி நட வடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News