உள்ளூர் செய்திகள்
தற்கொலை

ஆதம்பாக்கத்தில் திருமணமான 20 நாளில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-05-29 12:40 IST   |   Update On 2022-05-29 12:40:00 IST
ஆதம்பாக்கத்தில் திருமணமான 20 நாளில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆலந்தூர்:

ஆதம்பாக்கம், ராமகிருஷ்ணாபுரம், 3-வது தெருவை சேர்ந்தவர் விஜயன்(வயது29). கால் டாக்சி டிரைவர். இவருக்கு திருமணமாகி 20 நாட்கள் ஆகிறது. விஜயனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்நிலையில் புது மாப்பிள்ளையான விஜயன், அக்காள் வீட்டுக்கு விருந்துக்காக சென்று வந்தார். அப்போதும் அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனை அவரது அக்காள் கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த விஜயன் வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

Similar News