உள்ளூர் செய்திகள்
தீ எரிவதை படத்தில் காணலாம்.

குப்பையில் பற்றி எரியும் தீ-பொதுமக்கள் அவதி

Published On 2022-05-28 16:31 IST   |   Update On 2022-05-28 16:31:00 IST
பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள் கண் எரிச்சலால் திக்கப்படுகின்றனர். அடிக்கடி அங்குள்ள குப்பையில் தீ வைக்கப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி  53வது வார்டு ஏ.பி.நகர் பஸ்  நிறுத்தம் பகுதியில்   குப்பையில் நேற்று முதல் தீப்பற்றி எரிகிறது. அருகில் பெட்ரோல் பங்க் இருக்கிறது.  

அப்பகுதி சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாகும்.  புகை மூட்டம்  ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள்  கண் எரிச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அடிக்கடி அங்குள்ள குப்பையில் தீ வைக்கப்படுகிறது.  இதில் ஈடுபடுபவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News