உள்ளூர் செய்திகள்
வேனில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.

ஏற்காடு கோடை விழாவுக்கு சென்ற மாருதி வேன் திடீரென தீ

Published On 2022-05-28 09:58 GMT   |   Update On 2022-05-28 09:58 GMT
ஏற்காடு கோடை விழாவுக்கு சென்ற மாருதி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது
சேலம்:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இந்த கோடை விழாவிற்காக தமிழகத்தில் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். 

இந்த நிலையில் மகுடஞ்சாவடியை சேர்ந்த சத்யராஜ் என்பவர் நண்பர் நியாசுடன் ஏற்காடு கோடை விழாவிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது திருவாக–வுண்டனூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டுவிட்டு ஏற்காடு நோக்கிச் சென்றனர்.

சேலம் மாவட்ட கலெக்டர் பங்களா அருகே வேன் வரும்போது திடீரென கரும்புகை எழுந்தது. இதை அறிந்த டிரைவரான சத்யராஜ் மற்றும் அவரது நண்பர் மாருதி வேனை ஓரமாக நிறுத்தி விட்டு வெளியே வந்துவிட்டனர். இதனை அடுத்து கார் மளமளவென தீ பிடித்து தீப்பற்றி எரிந்தது.

இதனால் சாலையில் சென்றவர்கள்  இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு மற்றும் அஸ்தம்பட்டி காவல் துறையினர் விரைந்து வந்து துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். 

எனினும் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக காட்சி அளித்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News