உள்ளூர் செய்திகள்
file photo

குடிகள் மாநாட்டில் 33 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2022-05-28 15:07 IST   |   Update On 2022-05-28 15:07:00 IST
பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குடிகள் மாநாட்டில் 33 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை:

பொன்னமராவதி வட்டத்தில் வருவாய் கணக்குகளை தணிக்கை செய்யும் வருவாய்த்தீர்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் தொடங்கியது.

புதன்கிழமை காரையூர், வியாழக்கிழமை அரசமலை, வெள்ளிக்கிழமை பொன்னமராவதி கணக்குகள் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து 173 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து ஜமாபந்தியின் நிறைவாக மாலை குடிகள் மாநாடு நடைபெற்றது.

குடிகள் மாநாட்டிற்கு இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமை வகித்து பயனாளிகள் 33 பேருக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, பட்டாமாறுதல் ஆணை , சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.


முன்னதாக கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன் வரவேற்றார். தனி வட்டாட்சியர் பழனிச்சாமி நன்றி கூறினார்.


Tags:    

Similar News