உள்ளூர் செய்திகள்
கோடைகால கூடைப்பந்தாட்ட முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் ஆண்டுதோறும் கோடைகால கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 17 வது ஆண்டாக நடைபெற்று வரும் முகாமில், பள்ளி மாணவ மாணவியர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
கடந்த 16ம் தேதி தொடங்கிய முகாமானது, வருகின்ற ஜூன் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது.காலை மாலை என இரு வேளை நடைபெற்று வருகின்ற பயிற்சியில் 115க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். இங்கு விளையாடுகின்ற மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் நடத்தப்படும் விளையாட்டு விடுதிக்கு, 10க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பயிற்சி முகாமில் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன் கலந்து கொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கூடைப்பந்தாட்ட பயிற்றுனர் சண்முகபிரியன், அறந்தாங்கி கூடைப்பந்தாட்டக் கழக செயலாளர் குவிண்டன்,
பொருளாளர் விஜயகுமார், துணை தலைவர் மெய்யர், இணைச் செயலாளர்கள் சிவா,கிரண், பயிற்றுனர் காளிதாஸ் உள்ளிட்ட மாணவ, மாணவியர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.