உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

இளம்பெண் உள்பட 5 பேர் தற்கொலை

Published On 2022-05-28 14:52 IST   |   Update On 2022-05-28 14:52:00 IST
ஈரோட்டில் வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண் உள்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:

ஈரோட்டில் வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண் உள்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சித்தோடு அருகே உள்ள கங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (51).  இவருக்கு திருமணமாகி அமுதா என்ற மனைவியும் தமிழரசன் என்ற மகனும் உள்ளனர்.

பத்மநாபன் ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதி யில் தறிப்பட்டறையை குத்தகைக்கு எடுத்து ஓட்டி வந்தார். தறி ஓட்டுவதற்கு சரியாக பணம் இல்லாததால் அவரது குடும்பத்தினர் அவருக்கு பணம் கொடுத்து உதவி வந்தனர். மேலும் அவருக்கு குடி பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் பத்மநாபன் சேலையால் தூக்கு போட்டு கொண்டார். 

அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி பகுதிைய சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் குணசேகரன் (32). கூலி தொழிலாளி. இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் குணசேகரனுக்கு வயிற்று வலி அதிகமானதால் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து மதுவில் கலந்து குடித்து விட்டார். தொடர்ந்து அவர் தான் விஷம் குடித்ததை வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார்.
இதையடுதது அவரை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரி தாபமாக இறந்தார்.

சிவகிரி அருகே உள்ள கொல்லாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெக நாதன். இவரது மனைவி ஐஸ்வர்யா (27). இவர்க ளுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவருக்கு வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சமபத்தன்று ஐஸ்வர்யா திடீரென எலி பேஸ்ட் (விஷம்) குடித்தார். அக்கம் பக்கம் இருநதவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி லிங்கம்மாள். இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். 
இவர்களது இளைய மகன் பிரகாஷ் (40). பெயிண்டிங் வேைல செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவருக்கு குடி பழக்கம் இருந்ததாகவும் கூறப்படு கிறது. இவருக்கு திருமண மாகாததால் மன வருத்த த்தில் இருந்து வந்தார். மேலும் தற்கொலை செய்து கொள்வதாக அடிக்கடி கூறி வந்தார்.

இந்த நிலையில் வேதனையில் இருந்து வந்த பிரகாஷ் வீட்டில் சேலையால் தூக்கு மாட்டி கொண்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும்  வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மொடக்குறிச்சி அருகே உள்ள சோலார் புதூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (40). இவருக்கு திருமணமாகி லோகேஸ்வரி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி விஸ்வநாதனை பிரிந்து சென்று விட்டார். இவருக்கு குடி பழக்கம இருந்ததாகவும் மேலும்  கடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Tags:    

Similar News