உள்ளூர் செய்திகள்
பணி இடைநீக்கம்

பாஜக நிர்வாகி கொலை வழக்கு- காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

Published On 2022-05-27 16:34 GMT   |   Update On 2022-05-27 16:34 GMT
சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்து சென்னை காவல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்த பா.ஜ.கவின் எஸ்.சி.- எஸ்.டி. பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்த பாலசந்திரன் (30) கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பைக்கில் வந்த 3 பேர் பாலசந்திரனை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து, கொலை வழக்கில் தொடர்புடையதாக பிரதீப், அவனது கூட்டாளிகளான கலைவாணணன், ஜோதி, பிரதீப் சகோதரர் சஞ்சய் ஆகிய 4 பேரை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாஜக நிர்வாகி பாலசந்தர் கொலையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத புகாரில் சிவசுப்பிரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்.. டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு
Tags:    

Similar News