உள்ளூர் செய்திகள்
.

குடும்ப தகராறில் தூக்குபோட்டு இளம்பெண் தற்கொலை

Published On 2022-05-27 14:55 IST   |   Update On 2022-05-27 14:55:00 IST
குடும்ப தகராறில் தூக்குபோட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
 கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தமேலுபள்ளி அருகேயுள்ள சிவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரகுமார்.இவரது மனைவி ஜோதிகா (வயது 20). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. 

தற்போது இவர்கள் கிருஷ்ணகிரி ஹவுசிங் யூனிட் பகுதியில் வசித்துவருகின்றனர். கணவன் ,மனைவி இடையே கடந்த 25-ந்தேதி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஜோதிகா தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜோதிகா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .  திருமணமாகி 2 வருடத்திற்குள் பெண் தற்கொலை செய்துகொண்டதால் டி.எஸ்.பி.விஜயராகவனும் விசாரனை மேற்கொ ண்டுள்ளார்.
Tags:    

Similar News