உள்ளூர் செய்திகள்
மழை

விழுப்புரம் மாவட்டத்தில் இடியுடன் பெய்த கனமழை

Published On 2022-05-26 17:04 IST   |   Update On 2022-05-26 17:04:00 IST
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து 4 நாட்கள் மழை பெய்யும் என அறிவித்தது.

விழுப்புரம்:

தமிழகம் முழுவதும் கோடை காலம் தொடங்கி கடந்த 4-ந் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. கத்திரி வெயிலின் வெப்பம் தாங்காமல் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அளிக்கப்பட்டது.

இருந்தபோதிலும் இந்த கோடை வெயிலின் போது பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் சுட்ட எரித்தாலும் மாலை மற்றும் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்த வண்ணம் உள்ளது. இந்த பருவ நிலை மாற்றத்தினால் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபடுகின்றனர்.

தற்போது வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து 4 நாட்கள் மழை பெய்யும் என அறிவித்தது.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்து வந்தது. வெயிலின் தாக்கம் தாங்காமல் பொது மக்கள் திண்டாடி வந்தனர். நேற்று மாலை குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. மற்றும் வானில் கருமேகங்கள் சூழ்ந்து இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கத்திரி வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபட்டனர். மேலும் இந்த மழை இரவு 9 மணிக்கு தொடங்கி விடிய விடிய மழை பெய்தது. இந்த மலை விழுப்புரம் மாவட்டம் ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.

இந்த இடியுடன் கூடிய மழை விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான நன்னாடு,தோகைபாடி, வழுதரெட்டிபாளையம், காணை, கோலியனூர், மாம்பழப்பட்டு,சிந்தாமணி முண்டியம்பாக்கம், உள்பட பல்வேறு பகுதிகளில் பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த ஆண்டு கோடை காலத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் மிக அதிக அளவில் இருந்தது. இந்த ஆண்டு பருவ நிலை மாற்றம் மற்றும் வங்க கடலில் உருவான அசானி புயலின் காரணமாகவும் கோடை காலத்தில் தொடங்கிய கத்திரி வெயிலின் போது ஓரிரு தினங்களில் விட்டு விட்டு பெய்யும் மழையினால் இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபட்டனர்.

Tags:    

Similar News