உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

செம்பியநல்லூர் கிராம விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள்

Published On 2022-05-25 16:18 IST   |   Update On 2022-05-25 16:18:00 IST
வீட்டுக் காய்கறித் தோட்ட விதைகள் மற்றும் உரங்கள், உளுந்து விதைகள், ஸ்பிரேயர்கள் போன்றவை வழங்கப்பட்டன.

அவினாசி:

அவினாசியை அடுத்து ஆட்டையாம்பாளையத்தில் உள்ள ஒரு மண்டபத்தில், தமிழக முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்த நிகழ்ச்சி கானொலி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.

இதையடுத்து அவினாசி வட்டாரம் செம்பியநல்லூர்கிராம விவசாயிகளுக்கு வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை சார்பாக இலவசமாக தென்னங்கன்றுகள் ,வீட்டுக் காய்கறித் தோட்ட விதைகள் மற்றும் உரங்கள், உளுந்து விதைகள், ஸ்பிரேயர்கள் போன்றவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் செம்பியநல்லூர் ஊராட்சிமன்ற தலைவர் வி.கே. சுதா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தனலட்சுமி, அவினாசி ஆத்மா தொழில்நுட்ப தலைவர் சின்னக்கண்ணன் என்கிற ஆறுமுகம், ரமேஷ் காந்திமதி உள்பட திரளான விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கு நல வாரிய திட்டத்தின் கீழ் அமைப்பு சாரா தொழிலாளர்களை பதிவு செய்வதற்கான முகாமும் நடைபெற்றது. மேலும் மக்களை தேடி மருத்துவம் அமைப்பின் கீழ், வந்திருந்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News