உள்ளூர் செய்திகள்
கோவையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட முதியவர் கைது
இதுகுறித்து கடை உரிமையாளர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
கோவை:
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கடையில் காப்பர் கம்பி திருடு போனது. இதுகுறித்து கடை உரிமையாளர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியாக வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த காளியப்பன் என்பதும், திருட்டில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இவர் யாரும் தன்னை கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல கையில் சாக்கு, தாடி, மீசையுடன் சுற்றியதும் கண்டுபிடிக்கப்பட்து. இவர் மீது ஏற்கனவே காட்டூர், ரத்தினபுரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.