உள்ளூர் செய்திகள்
சூறைக்காற்றில் சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டது.

மணிமுத்தாறு அருகே சூறைக்காற்றில் சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றம்

Published On 2022-05-25 09:37 GMT   |   Update On 2022-05-25 09:37 GMT
மணிமுத்தாறு அருகே சூறைக்காற்றில் சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டது.
நெல்லை:

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு- மாஞ்சோலை  உயர் அழுத்த மின் பாதையில் நேற்று முன்தினம் சூறை காற்றின் காரணமாக மரங்கள் சாய்ந்து  10 மின் கம்பங்கள் முற்றிலும் சேதமடைந்தது.

இதனையடுத்து மாற்று மின் பாதை மூலம் மாஞ்சோலை பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும் போர்க்கால அடிப்படையில் சூறை காற்றால் சாய்ந்து விழுந்த மரங்களும், மின் கம்பங்களும் அப்புறப்படுத்தப்பட்டு புதிய மின்கம்பங்களை நடும் பணி நடைபெற்று வந்தது.

 கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையடும் பெருமாள் தலைமையில் கல்லிடைக்குறிச்சி உதவி செயற்பொறியாளர்  திருசங்கர், கல்லிடைக்குறிச்சி இளநிலை பொறியாளர் (பொறுப்பு) மாதவன் முன்னிலையில் கல்லிடைக்குறிச்சி உப கோட்ட மின் பணியாளர்கள் விைரவாக பணியில் ஈடுபட்டனர். சீரமைப்பு பணிகள் முழுமையடைந்த நிலையில் நேற்று மறுபடியும் மணிமுத்தாறு -மாஞ்சோலை இடையே உயர் மின்னழுத்த பாதையின் வழியே மின்சாரம்  பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
Tags:    

Similar News