உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சிறுசேமிப்பு பணத்தை இலங்கைக்கு நிவாரணமாக வழங்க முன்வந்த அரசு பள்ளி மாணவிகள்

Published On 2022-05-25 09:32 GMT   |   Update On 2022-05-25 09:32 GMT
மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், முதல்வர் அலுவலகத்தில் பேசி ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர்.

திருப்பூர்:

திருப்பூர், கணபதிபாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி கொழஞ்சி. இருவரும் பனியன் தொழிலாளிகள். அரசு மேல்நிலைப்பள்ளியில் இவர்களது மூத்த மகள் பிரேமா 8-ம் வகுப்பும், இளைய மகள் உமா 6-ம்வகுப்பும் பயில்கின்றனர். இவர்கள் தங்கள் சேமிப்பு பணத்தை, அடிக்கடி மக்களுக்கு உதவியாக வழங்கி வருகின்றனர்.

அவ்வகையில் சிறுசேமிப்பாக சேர்த்த, 3 ஆயிரம் ரூபாயை இலங்கை மக்களுக்கு நிவாரணமாக வழங்க முன்வந்துள்ளனர். இலங்கைக்கான நிவாரணமாக தமிழக முதல்வரிடம் நேரில் வழங்க விரும்புகிறோம். மாவட்ட நிர்வாகம் அதற்கு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து சகோதரிகள் கூறியதாவது:-

கடந்த 7 ஆண்டுகளாக சேமித்து வைக்கும் பணத்தை, பல்வேறு உதவிகளாக வழங்கி உள்ளோம். இதுவரை 50 ஆயிரம் ரூபாய் வரை வழங்கியுள்ளோம். ஒருமுறையாவது, நிவாரண உதவித்தொகையை முதல்வரிடம் வழங்க வேண்டும் என்று முயற்சித்தோம், இயலவில்லை. இம்முறையாவது, முதல்வரிடம் நேரில் வழங்க அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்றனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், முதல்வர் அலுவலகத்தில் பேசி ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர்.

Tags:    

Similar News