உள்ளூர் செய்திகள்
ராணுவ வீரர் வீட்டில் 25 பவுன் மற்றும் 30 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றவனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது35) இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.
இவருடைய மனைவி சுந்தரலேகா(29). கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவர் தையல் வகுப்பிற்காக வீட்டை சாத்திவிட்டு வெளியே சென்றார்.
பின்னர் மாலை நேரத்தில் வந்து பார்த்தபோது வீட்டு கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பெட்டியில் வைத்திருந்த 25 சவரன் தங்க, ரூ.30 ஆயிரம் ரொக்கப் பணம் திருடு போயிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசில் சுந்தரலேகா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடியவர்களை தேடி வருகின்றனர்.
திருமங்கலம் அருகே உச்சப்பட்டி இலங்கை அகதி கள் முகாமைச் சேர்ந்தவர் காஜா. இவருடைய மனைவி ரமணி (வயது32). சம்பவ த்தன்று ரமணி வீட்டை சாத்திவிட்டு அருகில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து ஆஸ்டின் பட்டி காவல் நிலையத்தில் ரமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.