உள்ளூர் செய்திகள்
மதுரை விமான நிலையம்

மதுரை விமான நிலையத்துக்கு நிலம் ஆர்ஜிதம்

Published On 2022-05-24 17:40 IST   |   Update On 2022-05-24 17:40:00 IST
மதுரை விமான நிலையம் விரிவாக்கத்துக்கு 95 சதவீதம் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது.
மதுரை

மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழு கூட்டம், தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, விமான நிலைய அதிகாரி பாபுராஜ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சர்வதேச விமான நிலையமாக மதுரையை மாற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் புதியதாக 5 விமான நிறுத்தும் இடம், 2 ஹெலிபேடுகள், கூடுதல் பயணிகள் பாதை, வாகன நிறுத்தம், பேருந்து வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன. 

இதற்கான விரிவாக்கப் பணிகளுக்காக 95 சதவீதம் நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிகள் முடிந்து உள்ளன. எனவே மீதமுள்ள பணிகளை முடிக்கும் வகையில் தமிழக அரசு நீர்நிலை வகை மாற்றம் குறித்து உத்தரவுகளை வெளியிட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவலை மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News