உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

மருமகளை கொலை செய்த மாமியார் கைது

Published On 2022-05-24 10:25 GMT   |   Update On 2022-05-24 10:25 GMT
முத்துப்பேட்டை அருகே மருமகளை கம்பியால் குத்தி கொலை செய்த மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கழுவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 38) .இவர் ஊரில் பந்தல், பிணம் வைக்கும் கூலர் பாக்ஸ் மற்றும் வாடகை பத்திரம் கடை வைத்துள்ளார். 

இவரது மனைவி தனலட்சுமி(35) . இந்நிலையில் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 21-ந்தேதி வீட்டில் ரத்த வெள்ளத்தில் பலத்த காயங்களுடன் தனலட்சுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தம், இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் தனலட்சுமியை கொலை செய்ததாக மாமியார் ரஞ்சிதம்(70), நாத்தனார் மகன் 15 வயது சிறுவன்,  மற்றும் வரதட்சணை கொடுமை செய்து கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் மகேந்திரன்(45), நாத்தனாரின் மற்றொரு மகன் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். 

மேலும் தனலட்சுமியின் நாத்தனார்கள் ரமணிதேவி(42), கலாதேவி(44) ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

இந்தநிலையில் ரஞ்சிதம் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில்,

தனலட்சுமிக்கும் எனது மகனுக்கும் திருமணம் நடைபெற்று 10வருடமாக குழந்தை இல்லை. இதுகுறித்து நான் மருமகளிடம் கேட்டபோது இருவருக்கும் அடிக்கடி தகராறு நடக்கும். முதல்நாள் இரவு எங்கள் இருவருக்குள் சண்டை ஏற்பட்டது. இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்தேன். 

அன்று இரவு எனது மகன் வேலை சம்பந்தமாக திடீர்னு வெளியில் சென்றதால் இந்த நேரத்தை பயன்படுத்தி தூங்கிகொண்டிருந்த தனலட்சுமியின் தலையில் இரும்பு கம்பியால் குத்தி தாக்கினேன். 

இதில் ரத்தம் வெளியேறி வழிதாங்க முடியாமல் தனலட்சுமி சத்தமிட்டு துடித்ததால் எனது இரண்டாவது பேரன் துணையோடு இரும்பு சாரணியால் முகத்தில் கோபம் தீர அடித்து கொன்றேன் என்று கூறியிருந்தார்.

Tags:    

Similar News