உள்ளூர் செய்திகள்
சித்த மருத்துவ சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

சித்த மருத்துவ ஆய்வு மாநாடு

Published On 2022-05-24 15:54 IST   |   Update On 2022-05-24 16:06:00 IST
திருவையாறு அருகே சித்த மருத்துவ ஆய்வு மாநாடு நடைபெற்றது.
திருவையாறு:

திருவையாறு அருகே திங்களூர் சாலை இமயம் அறக்கட்டளை வளாகத்தில் இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் மூலிகை ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் சித்த மருத்துவ ஆய்வு மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் பாண்டிச்சேரி நீதிபதி (ஓய்வு) வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

சித்த மருத்துவம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர் தேன். ரகு தலைமையில் நோயை குணமாக்க உதவுவது பாரம்பரியம் தந்த விருந்தே பாட்டி தந்த மருந்தே எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.சித்த மருத்துவ சாதனையாளர்களுக்கு அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது. இம்மாநாட்டில் மூலிகை கண்காட்சி, இரத்த பரிசோதனைகள் நடத்தப்பட்டது. 

மேலும், மருத்துவ ஆலோசனைகள், அன்னதானம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் சித்த மருத்துவர்கள் மதுரை முத்தரசன், தேவூர் மணிவாசகம், விவேகானந்தன் மற்றும் வக்கீல் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு சித்த மருத்துவத்தின் பயன்பாடுகள் குறித்து பேசினர். 

மாநாட்டிற்கான ஏற்பாடுகளை இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் மூலிகை ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News