உள்ளூர் செய்திகள்
கைதான சூர்யா.

செல்போன் பறித்த கொள்ளையன் கைது

Published On 2022-05-24 15:04 IST   |   Update On 2022-05-24 15:04:00 IST
வடமாநில வாலிபரை தாக்கி செல்போன் பறித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.
மதுரை

மதுரை நகரில் அண்மை காலமாக தனியாக செல்லும் நபர்களை குறிவைத்து பணம், நகை பறித்துச் செல்வது அதிகரித்து வருகிறது. இந்த செயல்களில் பெரும்பாலும் இளம் குற்றவாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பூபேஸ்குமார் (வயது 24). இவர் மதுரை பழங்காநத்தம் ரோட்டில் தங்கியிருந்து வெல்டிங் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று இரவு வேலையை முடித்து விட்டு பூபேஸ்குமார் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 

டி.வி.எஸ். நகர் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென பூபேஸ்குமாரை வாகனத்தால் மோதச் செய்தனர். பின்னர் அந்த கும்பல் அவரை தாக்கி செல்போனை பறித்துக் கொண்டு சென்றது. 

கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த பூபேஸ்குமார் ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். 

இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் தங்கதுரை மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் அமலநாதன், பன்னீர் செல்வம் மற்றும் ஜெகதீசன், சுந்தரம், அன்பழகன், இதயச்சந்தி ரன்,  கணேஷ்குமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. 

இவர்கள் சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர். அதில், வடமாநில வாலிபரை தாக்கிய நபர்கள் மற்றும் அவர்களது மோட்டார் சைக்கிள் வாகன எண் பதிவாகி இருந்தது. 

இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், செல்போன் பறிப்பில் ஈடுபட்டது பழங்காநத்தம் தண்டல்காரன்பட்டி, திரிசூல காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த  ெபான்னுச்சாமி மகன் சூர்யா (18), ஜெய்ஹிந்துபுரம் பாரதியார் தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது. இதில் சூர்யாவை போலீசார் கைது செய்தனர். தலைமறை வாகன உள்ள கார்த்திக்கை தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News