உள்ளூர் செய்திகள்
அதிர்ச்சி

மதுரை அம்மா உணவகத்தில் பூரி ஆம்லெட் விற்கப்பட்டதால் அதிர்ச்சி

Published On 2022-05-23 08:55 GMT   |   Update On 2022-05-23 08:55 GMT
மதுரை அம்மா உணவகத்தில் பூரி ஆம்லெட் விற்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை

மதுரை  புதூரில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை நேரத்தில் பூரி, மதியம் நேரத்தில் ஆம்லெட், இரவு நேரத்தில் உப்புமா ஆகியவை விற்கப்படுகின்றன.

அம்மா உணவகத்தில் இட்லி, பொங்கல், மதிய சாப்பாடு, சப்பாத்தி ஆகியவை மட்டுமே விற்கப்படுவது வழக்கம் ஆனால்  புதூரில் மாநகராட்சி உணவு பட்டியலில் இல்லாத பொருட்கள் விற்பனை செய்யப்படுவது பொதுமக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதூர் அம்மா உணவகம் அந்தப் பகுதியில் வசிக்கும் கவுன்சிலர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இதன் மூலம் அவருக்கு தினந்தோறும் ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இதுதொடர்பாக   மாநகராட்சி 14-வது வார்டு கவுன்சிலர் அந்தோணி அம்மாள் கூறுகையில், “அம்மா உணவகத்தில் அரசு நிர்ணயித்த விலைக்கு மட்டுமே பொருட்கள் விற்கப்படுகின்றன. இதற்கு முன்பு இங்கு வேலை பார்த்த பெண்  உளுந்து மூட்டை கடத்தல் வேலையில் ஈடுபட்டார். அவரை மாநகராட்சி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. அந்தப் பெண்தான் இதுபோல உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருவதாக தெரிவித்து உள்ளார்.

புதூர் அம்மா உணவகத்தில் மாநகராட்சி உணவு பட்டியலில் இல்லாத பூரி, ஆம்லெட் ஆகியவை விற்பனை செய்யப்படுவது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News