உள்ளூர் செய்திகள்
கறி விருந்தில் கலந்து ெகாண்ட பக்தர்கள்

பக்தர்களுக்கு கறி விருந்து

Published On 2022-05-20 16:56 IST   |   Update On 2022-05-20 16:56:00 IST
வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோவிலில் 470 ஆடுகளை வெட்டி பக்தர்களுக்கு கறி விருந்து நடந்தது.
அவனியாபுரம்

மதுரை திருப்பரங்குன்றம் விமான நிலையம் செல்லும் சாலையில் வெள்ளக்கல் கிராமத்தில் கழுங்கடி முனியாண்டி சாமி கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள்தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு நேர்த்திக்கடனாக முனியாண்டி சுவாமிக்கு ஆட்டுகிடா வெட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள்.

இந்த கோவிலில் 2 வருடங்களுக்கு ஒரு முறை கறி விருந்து அன்னதான திருவிழா நடைபெறும் . அப் போதுபக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கியஆடுகளை இரவு முழுவதும் வெட்டி சமைத்து காலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு பொங்கல் பானை ஊர்வலம் நடைபெற்றது .

இதைத்தொடர்ந்து இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு  முனியாண்டி கோவில் முன்பு 500 ஆட்டுகிடாய்கள் வெட்டப்பட்டது. அவை  சமையல் செய்யப்பட்டு இன்றுகாலை முதல் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

2 வருடங்களுக்குபிறகு  நடைபெற்றஇந்த  திருவிழாவில் பெருங்குடி, திருப்பரங்குன்றம், சிந்தாமணி, சாமநத்தம், காரியபட்டி உள்ளிட்ட சுற்றியுள்ள ஊர்களில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்த முனியாண்டி கோவில் வேண்டியது நிறைவேறும் என்றும், கொரோனா காலகட்டத்தின் போது கூட எங்கள் வெள்ளக்கல் பகுதிகளில் ஒருவருக்கு கூட கொரோனா வந்தது இல்லை என்றும் , கோவிலில் முதல் முதலாக எங்கள் பிரச்சனை தீர ஒரு ஆட்டுக்கிடா வெட்டி ஆரம்பித்த கோவில் திருவிழா தற்போது 500 ஆடுகள் நேர்த்திக் கடனாக வழங்கப்பட்டு இந்த ஆட்டுக் கிடாய் கறி விருந்து திருவிழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டு கழுங்காடி முனியாண்டி கோவிலில் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட 470 ஆட்டு கிடாய்கள்  வெட்டப்பட்டு கறி விருந்துஇன்று  காலை தொடங்கி இரவு வரை பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படுகிறது.

Similar News