உள்ளூர் செய்திகள்
பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வாயில் வெள்ளை துணி கட்டி காங்.கட்சியினர் போராட்டம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தனது சிறப்பு சட்டத்தின் கீழ் விடுதலை செய்ததை எதிர்த்து வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தனது சிறப்பு சட்டத்தின் கீழ் விடுதலை செய்தது. இதனை தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அறவழி போராட்டம் நடந்தது.
அதன்படி விருத்தாசலத்தில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் வன்முறையை எதிர்ப்போம் கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற வாசகம் கொண்ட பதாகையுடன் அறவழிபோராட்டம் செய்தனர். இப்போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.