உள்ளூர் செய்திகள்
கோடை விடுமுறை சீசன்: கன்னியாகுமரியில் போலீசார் கண்காணிப்பு தீவிரம்
கோடை விடுமுறை சீசன்: கன்னியாகுமரியில் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்று கண்காணிக்கும் போலீசார் - குற்றங்களை தடுக்க அதிரடி நடவடிக்கை
கன்னியாகுமரி:
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலக புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலாத் தலமாகும். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படும். இந்த 3 மாதங்களும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் வருகையும் அதிக அளவில் இருக்கும்.
ஆனால் இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாகக் கருதப்படுகிறது. இந்த சீசனுக்கு சபரிமலை சீசன் என்று கூறப்படுகிறது. இந்த சீசன் காலங்களில் தான் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை, சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை, மகரவிளக்கு தரிசனம், பொங்கல் பண்டிகை போன்ற தொடர் விடுமுறைகள் வருவதால் இந்த 3 மாத காலமும் வழக்கத்தை விட அதிக அளவில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
இதேபோல ஏப்ரல், மே மாதங்களில் இங்கு கோடை விடுமுறை சீசன் காலம் ஆகும். இந்த கோடை விடுமுறை சீசன் காலங்களில் பள்ளி, கல்லூரிகள், கோர்ட்டு மற்றும் ஒரு சில அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்த கோடை விடுமுறையை குதுகலத்துடன் சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று மக்கள் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
இந்த அடிப்படையில் பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால் கன்னியாகுமரியில் கோடை விடுமுறை சீசன் களை கட்ட தொடங்கியுள்ளது. இதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடு முறை நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் கன்னியாகுமரியில் சுந் றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
குறிப்பாக வட மாநில சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இதனால் திருட்டு, ஈவ்டீசிங் போன்ற குற்ற சம்பவங்களை தடுப்ப தற்காக கூடுதல் பாது காப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரன் பிரசாத் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா அறிவுரையின் பேரில் மோட்டார் சைக்கிளில் அதிநவீன சீருடையுடன் கூடிய போலீசார் கன்னியா குமரி கடற்கரை பகுதி யில் ரோந்து சென்று கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
பகல் மற்றும் இரவு நேரங்களில் இந்த கண்காணிப்பு பணி தீவிரமாகநடந்து வருகிறது. இவர்கள் கன்னியாகுமரி கடற்கரை சாலை, முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கி லித்துறை கடற்கரைப்பகுதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சன்னதி தெரு, தேரோடும் ரத வீதிகள், சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மெயின் ரோடு போன்ற அனைத்து பகுதிகளிலும் மோட்டார் சைக்கிளில் வலம் வந்து கண்காணித்து வருகிறார்கள். இதற்காக 5 மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.