உள்ளூர் செய்திகள்
கீழ்பென்னாத்தூர் சாலையில் கரும்பு கழிவுகள்– கொட்டியதால் பரபரப்பு
கீழ்பென்னாத்தூர் சாலையில் கரும்பு கழிவுகள்– கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கீழ்பென்னாத்தூர் :
கீழ்பென்னாத்தூர் அடுத்துள்ள தனியார் சர்க்கரை ஆலையில் இருந்து கரும்பு கழிவுகளை ஏற்றிகொண்டு இரவு 10 மணி அளவில் டிப்பர் லாரி ஒன்று கீழ்பென்னாத்தூர் வழியாக வேடந்தவாடி கிராமத்திற்கு சென்றது.
கீழ்பென்னாத்தூர் கோட்டான் ஏரிக்கரை பகுதியில் டிப்பர் லாரி சென்றபோது, எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரியில் இருந்த கரும்பு கழிவுகள் டிப்பரில் இருந்து கசிந்து சாலையில் கொட்டியது. ஏரிக்கரை பகுதியில் சென்றுகொண்டிருந்த இரு சக்கரவாகன ஒட்டிகள் டிப்பர் லாரியை மடக்கிபிடித்தனர். ஏரிக்கரை பகுதியில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும், 50 அடி நீளத்திற்கு கொட்டியிருந்த கரும்பு கழிவுகளில் வாகன ஓட்டிகள் வழுக்கி விழாமல் பாதுகாத்திடும்வகையில், சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு பணியில் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டிருந்தனர்.
தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நெடுஞ்சாலை துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் சமூக ஆர்வலர்கள் தகவல் அளித்ததின்பேரில் விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
சாலையின் நடுவே 50 அடிக்கும் மேலான நீளத்திற்கு கொட்டப்பட்டிருந்த கழிவுகளை, அகற்றினர்.
தீயணைப்பு மீட்பு பணியினர் சாலையில் தண்ணீர் பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர். விபத்துக்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க இரவோடு, இரவாக சுமார் 2 மணிநேர போராட்டத்தில் ஈடுபட்டு தூய்மை பணிகளை விரைந்து செயல்பட்ட நெடுஞ்சாலை துறையினர் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். டிப்பர் லாரி டிரைவர் சுரேஷிடம் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.