உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கன்னியாகுமரியில் வாலிபர் கொலையில் திணறும் போலீசார்

Published On 2022-05-20 15:37 IST   |   Update On 2022-05-20 15:37:00 IST
கன்னியாகுமரியில் 3 மாதங்களுக்கு முன்பு நடந்த வாலிபர் கொலை - துப்பு துலக்க முடியாமல் திணறும் போலீசார்
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் கன்னியா குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். 

சம்பவ  இடத்துக்கு மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு  கொலை நடந்த பகுதியில் மோப்பம் பிடித்த நாய் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கொலை நடந்த இடத்தில் கைரேகைகள் ஏதேனும் பதிவாகி உள்ளதா? என்று தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர். 

அதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரி சோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட அந்த வாலி பரின் கழுத்து பயங்கர ஆயுதத்தால் அறுக்கப்பட்டு ரத்தம் உறைந்த நிலையில் இருந்ததால் முந்தினநாள் இரவிலேயே கொலை நடந்தி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் கொலை செய்யப் பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யய் பட்டார்? என்ற விவ ரம் கொலை நடந்து 3மாதங்கள்ஆனபிறகும் துப்பு துலங்கவில்லை.

மதுபோதை தகராறில் அந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்துள்ளதா? என்பன  போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். முதலில் கொலை செய்யப்பட்டவர் யார்? என்று அடையாளம் தெரிந்த பிறகுதான் கொலைக்கான பின்னணி என்ன? கொலையில் ஈடுபட்ட கும்பல் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த யாரையாவது அங்கு வைத்து கொலை செய்து காரில் பிணத்தை கடத்தி கொண்டு வந்து கன்னியாகுமரி ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் உள்ள தண்டவாளத்தில் வீசி சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரியை சேர்ந்த கலையரசி என்ற இளம்பெண்ணை கொலை செய்து பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி இதே பகுதியில் மணலில் புதைத்த சம்பவம் அரங்கேறியது. அதன்பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள அதே நான்கு வழி சாலையில் கஞ்சா போதையில் இரட்டைக் கொலைச் சம்பவம் நடந்தது. 

இந்த நிலையில் மீண்டும் ஆள் நடமாட்டம் இல்லாத நான்கு வழி சாலை பகுதியில் இந்த கொலை நடந்ததால் அதே மாதிரியான போதை தகராறில் கும்பல் கொலை வெறியில் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

இதற்கிடையில் குமரி மாவட்டம் மற்றும் அருகில் உள்ள நெல்லை மாவட்டம் போன்ற இடங்களில்   மாயமானவர்களின் விவ ரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி இந்த கொலை தொடர்பாக துப்பு துலக்க அமைக்கப்பட்டு உள்ள 2 தனிப்படை போலீசாரும் வெளி மாவட்டங்களுக்கு சென்று இந்த கொலையை பற்றி துப்புதுலக்கும்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 

அவர்கள் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் போன்ற முக்கியமான இடங்களில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதிக்கு முந்தைய நாள் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். 
அப்போது கன்னியாகுமரி ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரை போன்று தோற்றம் உடைய நபர் ஒருவர் வடசேரி பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த காட்சி அங்கு உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகிஇருந்ததுகாண்பிக்கப்பட்டது. 

அந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி இருந்த வாலிபர் வடநாட்டை சேர்ந்தவர் போன்ற தோற்றமுடையவராக இருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனவே கொலை செய்யப் பட்ட அந்த வாலிபர் வடமாநிலத்தை சேர்ந்த வரா? என்றும் கன்னியா குமரியில் உள்ள லாட்ஜில்  தங்கி இருந்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் லாட்ஜுகளில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். 

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த வட மாநிலத்தை சேர்ந்த அந்த வாலிபரை யாராவது பணத்துக்காகவோ நகைக்காகவோ கொலை செய்து பிணத்தை ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் வீசி சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இருப்பினும் இந்த கொலை நடந்து 3 மாதங்கள் ஆனபிறகும் கொலை செய்யப்பட்டவர் யார்? என்று இதுவரை போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. 

இந்த கொலை வழக்கு கிணற்றில் போடப்பட்ட கல்போல் கிடப்பில் கிடக்கிறது. சி.சி.டி.வி.யில் காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய பிறகு போலீசாரால் கொலை செய்யப்பட்டவர் யார்? என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

Similar News