உள்ளூர் செய்திகள்
சித்ரவதை

வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை

Published On 2022-05-20 15:36 IST   |   Update On 2022-05-20 15:36:00 IST
வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்

திருவாடானை அருகே சி.கே.மங்கலத்தைச் சேர்ந்தவர் அனுசியா (வயது35) இவருக்கும்உச்சிப்புளி அருகே தாமரைக்குளத்தை சேர்ந்த கர்ணன் என்பவருக்கும் கடந்த ஆண்டு மார்ச் 5-ந்தேதி தாமரைக்குளத்தில் உள்ள பத்திர காளியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

அனுசியா ராமேசுவரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் 4 பேர் மீது புகார் மனு அளித்துள்ளார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 

திருமணத்தின் போது வரதட்சணையாக 40 பவுன் தங்க நகையும் சீர்வரிசைப் பொருட்களும் மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் கொடுத்தோம். திருமணமான ஒரு வாரத்திற்குள் கணவர் அமெரிக்கா சென்று விட்டார். கணவர் வீட்டில் இருந்த பொழுது நாத்தனார் மற்றும் மாமியார்நிம்மதியாக இருக்க விடாமல் பல்வேறு குறைகளைக் கூறி என்னை தினமும் கொடுமைப்படுத்தினர். 

கடந்த மார்ச் 14-ந்தேதி கணவர் வெளிநாட்டிலிருந்து வந்த தகவலறிந்து மார்ச் 17-ந்தேதி கணவரை காண்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றேன். எனது மாமியார் மற்றும் நாத்தனாரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு கணவர் அடித்து துன்புறுத்தி, 100 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் பணமும் வரதட்சணையாக கொண்டு வந்தால் தான் வாழமுடியும் என்று கூறி கொடுமைப் படுத்தினார். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதையடுத்து கணவர் கர்ணன் மற்றும் உறவினர்கள் அன்ன லட்சுமி சரவணன் ராக்கு முத்து ஜானகி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News