உள்ளூர் செய்திகள்
திருவட்டார் பூந்தோப்பு சந்திப்பில் மழை நீர் ஓடை அமைக்கும் பணி
திருவட்டார் பூந்தோப்பு சந்திப்பில் மழை நீர் ஓடை அமைக்கும் பணி - ஊராட்சி தலைவர் ஜெகன்நாதன் தொடங்கி வைத்தார்
கன்னியாகுமரி:
திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட காட்டாத்துறை ஊராட்சி பூந்தோப்பு சந்திப்பு முதல் பட்டணம் சானல் வரை ரூ.8 லட்சத்து 53 ஆயிரம் செலவில் மழைநீர் ஒடை அமைக்கும் பணியை திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகன்நாதன் தொடங்கி வைத்தார்.
அவருடன் ஒன்றிய கவுன்சிலர் பிரேமசுதா, முன்னாள் வார்டு உறுப்பினர் சேம் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.