உள்ளூர் செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-05-20 14:58 IST   |   Update On 2022-05-20 14:58:00 IST
திருத்துறைப்பூண்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருத்துறைப்பூண்டி:

இந்திய செஞ்சிலுவை சங்கம் திருவாரூர் மாவட்ட கிளை மற்றும் திருத்துறைப்பூண்டி கிளை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தண்டலச்சேரி மற்றும் இளைஞர் இந்திய செஞ்சிலுவை சங்கம் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி.குமரவேல் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர்.வெ.சக்திவேல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சிக்கு செஞ்சிலுவை சங்க திருத்துறைப்பூண்டி பிரிவு தலைவர் சிவா. சண்முகவடிவேலு, செயலாளர் எடையூர் இரா. வே.மணிமாறன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக இந்திய செஞ்சிலுவை சங்க மாநில பொருளாளர் ஜெ.வரதராஜன், கவுரவ விருந்தினராக போக்கு–வரத்து இன்ஸ்பெக்டர் இளங்கிள்ளிவளவன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியை இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணை–ப்பாளர் முனைவர் ஏழுமலை ஒருங்கிணைத்தார்.

பேரிடர் மேலாண்மை பயிற்றுநர் பெஞ்சமின், இந்தியன் ரெட் கிராஸ் அலுவலக செயலாளர் கீதா கலந்து கொண்டனர். ரத்த தான முகாம் நடைபெற்றது. அதில் ஏராளமானோர் ரத்ததானம் வழங்கினர். 

நிகழ்ச்சியின் முடிவில் இந்திய செஞ்சி–லுவை சங்க வைஸ் பிரசிடென்ட் முனைவர் நா.துரை–ராயப்பன் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நன்றி கூறினார்.

Similar News